வாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாடு டேக் (Tag) செய்வதாகும். தற்போது இக்குறைபாட்டிற்கு நிவர்த்தி கிட்டியுள்ளது.வாட்ஸ் அப்பினால் புதிதாக 2.16.272 என்ற புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.புதிதாக வெளியிடப்பட்ட இந்த அப்டேட்டில் குரூப் சாட் (Group chat ) செய்யும் போது, குழு உறுப்பினர்களை தனியாக Tag செய்யலாம்.

மேலும் வாட்ஸ் அப் குழுவில் எந்தக் குறிப்பிட்ட நபருக்கு, செய்தி அனுப்பவேண்டுமோ, அவரை @ குறியீடு கொடுத்து டேக் (Tag) செய்யமுடிவதனால் எமக்கு அவசியமான செய்திகளை யாரும் தவறாமல் படிக்க முடியும். அதுமட்டுமல்லாது நீங்கள் tag செய்யும் உங்களுடைய நண்பர் அக்குழுவினை mute செய்திருந்தாலும் கூட அவருக்கு அறிவிப்பு செய்தி (Notification message) திரையில் தோன்றுவதும் குறிப்பிடத்தக்கது.