ஒரு வருட நிறைவை முன்னிட்டு வெளியாகும் Windows 10 அப்டேட்!

விண்டோஸ் 10 இயங்குதளமானது 350 மில்லியன் வரையான சாதனங்களில் பயன்படுத்தப்படுவது தொடர்பான தகவலை இரு தினங்களுக்கு முன்னர் தந்திருந்தோம்.அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி விண்டோஸ் 10 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைகின்றது.

இதனை கொண்டாடும் முகமாக மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 பயனர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றினை அதே நாளில் அறிமுகம் செய்யவுள்ளது.

இப் புதிய பதிப்பில் Cortana, பாதுகாப்பு வசதி என்பவற்றினை மேம்படுத்தியிருப்பதுடன் மேலும் சில புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.இதனை விண்டோஸ் 10 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் இலவசமாக தமது சாதனங்களில் நிறுவிக்கொள்ள முடியும்.

மேலும் இப் புதிய பதிப்பு Windows 10 Anniversary என அழைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வருட நிறைவை முன்னிட்டு வெளியாகும் Windows 10 அப்டேட்! ஒரு வருட நிறைவை முன்னிட்டு வெளியாகும் Windows 10 அப்டேட்! Reviewed by ANBUTHIL on 7:34 PM Rating: 5
Powered by Blogger.