இலவச கால் வசதி தரும் புதிய ஆப்ஸ்!

2ஜி சேவையிலும் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தும் திறன் கொண்ட புதிய ஆப்ஸ் ஒன்றை சிங்கப்பூர் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ளது.’நானு’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப்ஸ் இந்தியாவில் அதிகமானவர்களால் தற்போது பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரைச் சேர்ந்த இணையத்தள சேவை வழங்கும் நிறுவனம் 'நானு' உலகின் பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.

இதன்படி இந்த ஆப்ஸ் பயன்படுத்துவோர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இலவச தொலைபேசி அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை பெற முடியும். இதன் சிறப்பு அம்சம் என்னவெனில் 2ஜி சேவையில் அழைப்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பதே.

இலவச சேவை வழங்குவதற்காக ஒவ்வொரு மாதமும் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, சிங்கப்பூர் நிறுவனம் 20,000 அமெரிக்க டொலர்களை வழங்கும் எனகூறப்படுகிறது.


நானு (nanu) என்ற இந்த ஆப்ஸை இதுவரை உலகம் முழுவதும் 2.6 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இவர்களில் 60 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு முறை கால் செய்யும் போதும், எதிர்முனையில் இருப்பவர்கள் அதனை எடுக்க ஆகும் 10 விநாடி காலத்திற்குள் பெறப்படும் விளம்பரங்கள் மூலம் இந்நிறுவனத்திற்கு வருமானம் கிடைப்பதால், இலவச தொலைபேசி வழங்க முடிகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலவச கால் வசதி தரும் புதிய ஆப்ஸ்! இலவச கால் வசதி தரும் புதிய ஆப்ஸ்! Reviewed by அன்பை தேடி அன்பு on 11:55 AM Rating: 5
Powered by Blogger.