கணினி  உலகில் மைக்ரோசொப்ட் நிறுவனமும்,இணைய உலகில் பேஸ்புக் நிறுவனமும் அசைக்க முடியாத இடத்தில் உள்ளன.தற்போது இவ் இரண்டு நிறுவனங்களும் இணைந்து பாரிய இணைய வலையமைப்பு ஒன்றினை உருவாக்க முன்வந்துள்ளன.

இதன்படி அட்லாண்டிக் சமுத்திரத்திற்கு ஊடாக சுமார் 4,000 மைல் நீளம் கொண்ட வலையமைப்பினை உருவாக்கவுள்ளன.இவ் வலையமைப்பானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் முகமாக உருவாக்கப்படவுள்ளது.


இதன் மூலம் 160Tbps எனும் வேகத்தில் தரவுகளைக் கடத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும் இந்த வலையமைப்பு உருவாக்கம் ஆனது எதிர்வரும் 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவு செய்யப்படக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.இத் திட்டத்திற்காக சுமார் 200 மில்லியன் டொலர்கள் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது.