பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக், 360 டிகிரி கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை பயனர்கள் பதிவேற்றவும், பார்க்கவும் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் பயனர்களைக் கவரும் வகையில் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், தற்போது, 360 டிகிரி கோணத்தில் எடுக்கப்படும் படங்களை பதிவேற்றவும், பார்க்கவும் ஏற்ற வசதியை ஏற்படுத்தியுள்ளது.

பனோரமா 360 போன்ற ஆண்ட்ராய்ட் செயலிகள் மூலம் எடுக்கப்படும் 360 டிகிரி புகைப்படங்களை எடுத்து பதிவேற்றலாம். பதிவேற்றியவுடன் அந்தப் படம் பயனர்களது கணினி திரைக்கு ஏற்றவாறு, அல்லது ஸ்மார்ட்ஃபோனுக்கு ஏற்றவாறு அது மாற்றப்படும்.

பதிவேற்றப்பட்டுள்ள படத்தின் கீழ் வலது மூலையில் சிறிய திசைகாட்டி போன்ற ஐகான் தோன்றினால் அது 360 டிகிரி புகைப்படம் என அறியலாம். மவுஸை க்ளிக் செய்து அந்த படத்தில் மேல், கீழ், வலது, இடது என அசைக்கும்போது அந்த புகைப்படத்தின் முழு வடிவமும் தெரியவரும்.

மார்க் ஸக்கர்பெர்க் பதிவேற்றிய 360 டிகிரி புகைப்படம்