அதிரடியாக தடை செய்யப்பட்ட வாட்ஸ் அப்

வாட்ஸ் அப் ஆனது உலகின் பிரபலமான குறுஞ்செய்தி அப்பிளிக்கேஷனாக காணப்படுவதுடன், மில்லியன் கணக்கான பயனர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.இன்றையகால கட்டத்தில் வாட்ஸ் அப்பின் ஊடாக சமூகத்திற்கு சார்பான தகவல்களுக்கு நிகராக சமூக விரோத செய்திகளும் மின்னல் வேகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் பிரேஸில் நாட்டில் வாட்ஸ் அப் சேவையானது 72 மணிநேரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.மொபைல் வலையமைப்பு சேவையினை வழங்கிவரும் நிறுவனங்களுக்கு பிரேஸில் அரசாங்கம் விடுத்த உத்தரவினை அடுத்தே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரேஸிலில் இடம்பெற்ற போதைப் பொருள் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்றினை பெறுவதற்காக வாட்ஸ் அப் நிறுவனத்தை அரசாங்கம் அணுகியுள்ளது.இதற்கு “குறுஞ்செய்திகள் என்கிரிப்ட் செய்யப்படுவதனால் அவற்றினை மீளப் பெற முடியாது” என வாட்ஸ் அப் நிறுவனம் கைவிரித்துள்ளது.

இதன் காரணமாகவே பிரேஸில் அரசு வாட்ஸ் அப் சேவையினை 72 மணி நேரம் ஸ்தம்பிதம் அடைய செய்துள்ளது.
அதிரடியாக தடை செய்யப்பட்ட வாட்ஸ் அப் அதிரடியாக தடை செய்யப்பட்ட வாட்ஸ் அப் Reviewed by ANBUTHIL on 4:16 PM Rating: 5
Powered by Blogger.