ALEXA RANK
அன்பை தேடி தளத்தில் தொழில்நுட்ப பதிவு எழுத உங்களுக்கு விருப்பமா?
வணக்கம் நண்பர்களே... புதிய பதிவர்களுக்கு தொழில்நுட்பம் குறித்து எழுதும் ஆசை உள்ளது. ஆனால் தான் எழுதுவது எல்லோரிடமும் சென்று சேருமா என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கும். அந்தக் கவலையை போக்கவே “அன்பைத்தேடி ” தளம் உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குகிறது.நீங்கள் அனுப்பும் பதிவு உங்களின் பெயருடன் அடுத்த 12 மணிநேரங்களில் அன்பைத்தேடி தளத்தில் பகிரப்படும்.
தொழில்நுட்ப பதிவு எழுத சில கட்டுப்பாடுகள்:
1. உங்கள் தளத்தில் ஏற்கனவே உள்ளதை சில மாற்றங்கள் உடன் பகிரலாம்
2. பதிவு 100 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எந்த மாதிரியான பதிவுகளை எழுதலாம் ?
1. ஆங்கில தளத்தில் உள்ள பதிவை தமிழில் மொழி மாற்றம் செய்தும் எழுதலாம்.
2. குறிப்பிட்ட தொழில்நுட்ப விசயத்துக்கான விளக்கம். (உதாரணம்: Cloud Computing, Tablet PC போன்றவற்றை தமிழில் எழுதலாம்/ மொழி பெயர்த்து எழுதலாம்)
3. இணையம்,கணினி போன்றவை குறித்த தகவல்கள் பகிரலாம்.
4. குறிப்பாக இது தொழில்நுட்ப பதிவு என்று நீங்கள் நினைக்கும் எல்லாவற்றையும் எங்களுக்கு அனுப்புங்கள். நாங்கள் பரிசீலித்து பிரசுரம் செய்கிறோம்.
எப்படி அனுப்புவது ?
வலைப்பூவில் ஒரு பதிவு எழுதிய பின் அதை Word Document ஆகவோ அல்லது நேரடியாக மின்னஞ்சல் மூலமோ எங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். (படங்கள் இருப்பின் அவற்றையும் சேர்த்து அனுப்பவும்)
anbuthil@gmail.com
பதிவின் முடிவில் உங்களைப் பற்றியும்,உங்கள் வலைப்பூ பற்றியும் சில வரிகளில் சொல்லவும்.நீங்கள் அனுப்பும் பதிவு உங்களின் பெயருடன் அடுத்த 12 மணிநேரங்களில் அன்பைத்தேடி தளத்தில் பகிரப்படும்.தங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி...