இணைய உலாவியில் புத்தம் புதிய வசதி

கூகுளின் குரோம் இணைய உலாவி மற்றும் மொஸிலாவின் பயர்பாக்ஸ் உலாவி என்பவற்றிற்கு போட்டியாக காணப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எனும் உலாவியினை இன்று அதிகளவானவர்கள் மறந்திருப்பார்கள்.காரணம் மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவிக்கு விடைகொடுத்து எட்ஜ் எனும் புதிய உலாவியினை அறிமுகம் செய்திருந்தது.

இதனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பாவனை வெகுவாக குறைந்துள்ளது.இதற்கிடையில் தனது புதிய எட்ஜ் உலாவியில் பயனர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் விளம்பரங்களை தடை செய்யும் வசதியினை தற்போது மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இவ் வசதியானது நேரடியாகவும், நீட்சிகளைப் பயன்படுத்துவதன் ஊடாகவும் ஏனைய உலாவிகளில் கிடைக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இணைய உலாவியில் புத்தம் புதிய வசதி இணைய உலாவியில் புத்தம் புதிய வசதி Reviewed by அன்பை தேடி அன்பு on 3:17 PM Rating: 5
Powered by Blogger.