கூகுள் தாராளம் ரூ.4000 தள்ளுபடி செய்து அசத்தல்.!!

எல்ஜி தயாரித்த கூகுள் நெக்சஸ் 5எக்ஸ் கருவிக்கு கூகுள் நிறுவனம் ரூ.4000 தள்ளுபடி அறிவித்துள்ளது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சலுகை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் கருவியை வாங்குவோருக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் தாராளம் : ரூ.4000 தள்ளுபடி செய்து அசத்தல்.!!
 வருத்தம் அளிக்கும் விதமாக நெக்சஸ் 6பி கருவிக்கு எவ்வித சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை. கூகுள் நெக்சஸ் 5எக்ஸ் கருவியை ரூ.4000 தள்ளுபடி செய்யப்பட்டு பின் கூகுள் ஸ்டோர் மூலம் நெக்சஸ் 5எக்ஸ் 32ஜிபி மாடல் ரூ.27,900க்கும், 16ஜிபி மாடல் ரூ.23,900க்கும் விற்பனை செய்யப்பட இருக்கின்றது. இந்த சலுகையானது மார்ச் மாதம் 27 ஆம் தேதியுடன் நிறைவடைகின்றது என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

எல்ஜி நிறுவனம் தயாரித்த கூகுள் நெக்சஸ் 5எக்ஸ் 16ஜிபி மாடல் இந்தியாவில் ரூ.31,990க்கும், 32ஜிபி மாடல் ரூ.35,990க்கும் வெளியிடப்பட்டது. நெக்சஸ் ப்ரியர்கள் ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாட இந்த சலுகை வழி செய்யும் என எதிர்பார்க்கலாம்.
கூகுள் தாராளம் ரூ.4000 தள்ளுபடி செய்து அசத்தல்.!! கூகுள் தாராளம் ரூ.4000 தள்ளுபடி செய்து அசத்தல்.!! Reviewed by ANBUTHIL on 8:15 PM Rating: 5
Powered by Blogger.