கடந்த மாதம் #Freedom 251 எனும் ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் பெரும் பரபரப்பாக பேசப்பட்டிருந்தன.4 அமெரிக்க டொலர்களே பெறுமதியான இக் கைப்பேசியானது உலகிலேயே மிகவும் விலை குறைந்த கைப்பேசி என விளம்பரப்படுத்தப்பட்டு இந்திய அளவில் விற்பனைக்கான முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

#Quad Core Processor, பிரதான நினைவகமாக 1GB RAM, 8GB சேமிப்பு நினைவகம், qHD தொடுதிரை எனும் அம்சங்களைக் கொண்ட குறித்த கைப்பேசியினை கொள்வனவு செய்வதற்கு பெருமளவானவர்கள் ஆர்வம் காட்டிய நிலையில் திடீரென முற்பதிவுகள் நிறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் தற்போது இக் கைப்பேசி தொடர்பாக பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இதேவேளை சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட Adcom Ikon 4 எனும் ஸ்மார்ட் கைப்பேசியே மீள்பதிப்பு செய்யப்பட்டு இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டதாகவும் தகவல் ஒன்று கசிந்துள்ளது.