டெக்ஸ்டாப் கணினிகளை விடவும் பல அம்சங்களை உள்ளடக்கியுள்ள ஐபோன்களுக்கு இன்று மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருக்கின்றது.எனினும் பல சமயங்களில் அதன் செயற்பாட்டு வேகம் குறைவடைகின்றது. இதனால் பயனர்கள் சிரமப்பட வேண்டி இருக்கின்றது.

இதனைத் தவிர்ப்பதற்கு பல்வேறு வழிகள் கையாளப்படுகின்ற போதிலும் இப்பிரச்சினைக்கு பிரதான காரணம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அதாவது ஐபோன்களில் பயன்படுத்தப்படும் அப்பிளிக்கேஷன்களில் உள்ளடக்கப்பட்டுள்ள அனிமேஷன்களே அதன் செயற்பாட்டினை மந்தப்படுத்துகின்றது என்பதாகும்.

இந்த அனிமேஷன்களை நிறுத்துவதன் ஊடாக ஐபோன்களின் செயற்பாட்டு வேகத்தை அதிகரிக்கக்கூடியதாக இருப்பதுடன், மின்கல செயற்பாட்டு நேரத்தினையும் அதிகரிக்க முடியும்.