பழைய கணினிகளை மின்னல் வேகத்தில் இயக்க இதை தான் செய்யனும்.!!

உங்கள் கணினி அல்லது லேப்டாப் பழையதானால் சில நேரங்களில் அவை மெதுவாக செயலப்படும். புதிய ப்ரோகிராம்கள் பழைய கணினியில் செயல்படாமல் இருக்கலாம். இருப்பினும் கணினி மெதுவாக செயல்பட பல காரணங்கள் இருக்கும்.


நெட் பயன்படுத்தும் போது கோப்புகளை டவுன்லோட் செய்யும்போதும் கணினி மெதுவாக செயல்படும். நீங்கள் அதற்காக பணம் செலவு செய்யாமலே உங்கள் கணினியை வேகமாக செயல்பட வைக்க முடியும்.


டிஸ்க் கிளீன் செயல்படுத்தவும் இதற்கு திரையின் வலது ஓரத்திற்கு சென்று செட்டிங்கை தட்டவும். (அல்லது நீங்கள் mouse பயன்படுத்தினால் திரையின் கீழே வலது ஓரத்தில் குறிபார்த்து mouse பாயிண்டரை மேலே செலுத்தவும். பின்பு செட்டிங்கை கிலிக் செய்யவும்) பிறகு கண்ட்ரோல் பேனலை தட்டி சர்ச் பாக்ஸில் அட்மின் என்று டைப் செய்யவும். Administrative toolsஐ தட்டி அல்லது கிலிக் செய்து டிஸ்க் கிளீன் அப் என்பதை இருமுறை கிலிக் செய்யவும்.


உங்கள் வன்பொருளை டீஃப்ராக்மெண்ட் செய்யவும் ஸ்டார்ட் பொத்தானை கிலிக் செய்து டிஸ்க் டீஃப்ராக்மெண்டை திறக்கவும். சர்ச் பாக்ஸில் Disk Defragmenter என்று டைப் செய்யவும். பிறகு ரிஸல்ட் பட்டியலில் Disk Defragmenter என்பதை கிலிக் செய்யவும். இந்த முறைகளை பின்பற்றவும். இது முடிய பல மணி நேரம் ஆகலாம். இது அளவை மற்றும் வன்பொருளின் பிரிவின் டிகிரியை பொருத்தது. இந்த செயல் நடைபெறும் பொழுது நீங்கள் கணினியை பயன்படுத்தலாம்.அங்கீகரிக்கப்பட்ட ஆண்டிவைரஸ் நிறுவவும் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டிவைரஸ் நிறுவலாம். ஆண்டிற்கு ரூ.300 முதல் ரூ.400க்குள் இருக்கும் ஆண்டிவைரஸ் மென்பொருளை பெற்று கொள்ளவது போதுமானது. இது அங்கீகாரமற்ற ப்ரோகிராம்கள் நிறுவுவதை தவிர்க்க உதவும். இதனால் வைரஸ் பாதிப்பில் இருந்து உங்கள் கணினி காக்கப்படும்.
சி கிலீனர் பயன்படுத்தவும் இது தற்காலிக கோப்புகளை அழிக்க உதவும். கேச்சே போன்ற கொப்புகள் உங்கள் கணினியை மெதுவாக செயல்பட வைக்கலாம். அவற்றை நீக்க இது உதவுகின்றது இந்த மென்பொருள் இலவசம் தான். இது எல்லா கணினிகளுக்கும் ஒத்துவரும்.


தேவையில்லாத ப்ரோகிராம்களை நிறுவி இருந்தால் நீக்கவும் உங்கள் கணினியில் அதிகமாக ப்ரோகிராம்கள் இருந்தாலும் கணினி மெதுவாக செயல்படும். ஆகையால் தேவையில்லாத ப்ரோகிராம்கள் நிறுவப்பட்டிருந்தால் அவற்றை நீக்கினால் போதும், கணினி வேகமாக செயல்படுவதை காண முடியும்.
பழைய கணினிகளை மின்னல் வேகத்தில் இயக்க இதை தான் செய்யனும்.!! பழைய கணினிகளை மின்னல் வேகத்தில் இயக்க இதை தான் செய்யனும்.!! Reviewed by ANBUTHIL on 3:02 PM Rating: 5
Powered by Blogger.