மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள 344 மருந்துகளின் பெயர்ப்பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக புதுச்சேரி மாநில மருந்துக்கட்டுப்பாட்டுத் துறை செயலாளர் ஜி.ராகேஷ் சந்திரா வெளியிட்ட அறிக்கை:

மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் 344 வகையான மருந்துகள், அழகு சாதனப் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்து கடந்த 10-ம் தேதி அரசாணை வெளியிட்டது.

அதன்படி புதுச்சேரி யூனியன் பிரதேசம் புதுவை, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் மேற்கண்ட 344 மருந்துகள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டி, மருந்து உற்பத்தியாளர்கள், மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் இத்துறையால் வெளியிடப்பட்ட குறிப்பாணை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மருந்துகள் விவரங்கள் என்ற www.cdsco.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.