பொது இடங்களில் உள்ள Wi-Fi வலையமைப்பை பயன்படுத்துபவர்களே எச்சரிக்கை

இணைய தொடர்பாடலின் நவீன தொழில்நுட்பமான Wi-Fi ஆனது வேகம் கூடியதாக இருப்பதுடன், இன்று பல பொது இடங்களில் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகின்றது.இதன் இலகு தன்மை, இலவசம் மற்றும் வேகம் காரணமாக பெருமளவானவர்கள் இவ் வலையமைப்பு தொழில்நுட்பத்தினையே அதிகளவில் பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர்.

இவ் ஆர்வம் ஆனது பல சமயங்களில் அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்தாக அமைவதாக ஆய்வு ஒன்றின் ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் ஒன்றில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் 4 மணிநேரத்தில் சுமார் 2,000 பேர் வரை Wi-Fi வலையமைப்பினை பயன்படுத்தியிருந்ததுடன் 8 மில்லியன் டேட்டா பக்கெட்களை பரிமாற்றம் செய்திருந்தனர்.

இந்த டேட்டாக்களை தனி நபர் நலன் கருதி Wi-Fi சேவையை வழங்கிய நிறுவனம் சேமிப்பது இல்லையெனினும் இவ் வலையமைப்பில் இணைந்துகொண்டு தனி நபர்களின் தரவுகளை கையகப்படுத்துவதற்கான சாத்தியம் ஹேக்கர்களுக்கு அதிகம் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

பொது இடங்களில் உள்ள Wi-Fi வலையமைப்பை பயன்படுத்துபவர்களே எச்சரிக்கை பொது இடங்களில் உள்ள Wi-Fi வலையமைப்பை பயன்படுத்துபவர்களே எச்சரிக்கை Reviewed by ANBUTHIL on 5:42 PM Rating: 5
Powered by Blogger.