அட்டகாசமான அம்சங்களுடன் Galaxy S7 மற்றும் Galaxy S7 Edge மொடல்களை அறிமுகப்படுத்திய சாம்சங் (வீடியோ இணைப்பு)

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தனது S7 மற்றும் Galaxy S7 Edge மொடல்களை சாம்சங் நிறுவனம் பார்சிலோனாவில் நடைபெற்ற மொபலை கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெற்ற உலக மொபைல் கண்காட்சியில் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனம் தனது Galaxy S7 Galaxy S7 Edge மொடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்.

5.5 மற்றும் 5.1 இன்ச் தொடுதிரை வசதியுடன் அறிமுகமாகியுள்ள இந்த மொபைல்கள் Water Resistant வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளன.


முந்தைய S6 மற்றும் S6 Edge மொடல்களில் இந்த வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருப்பு, வெள்ளை, சில்வர் மற்றும் கோல்டன் பிளாட்டினம் ஆகிய நிறங்களில் இந்த மொபைல்கள் கிடைக்கும்.

சிறப்பு அம்சமாக எப்பொழுதும் உயிர்ப்புடனே இருக்கும் வகையில் இதன் திரை (Always on display) வடிவகைப்பட்டுள்ளது. எனவே நாம் அடிக்கடி பட்டனை ஆன் செய்து மொபைலை பயன்படுத்தும் தேவை இருக்காது.

4 GB Ram , நீண்ட நேரம் உழைக்கும் பாட்டரி, ஆகிய சிறப்பு அம்சங்களும் உள்ளன.

ஸ்மார்ட் போன்களில் முதன்முறையாக 12 MP Dual Pixel கமெரா வசதியுடன் இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு பகுதிகளையும் நாம் Focus செய்யலாம். மேலும் இதன் முன் பக்க மற்றும் பின் பக்க கமெராக்கள் இரவிலும் துல்லியமாக படம் பிடிக்கும் ஆற்றல் வாய்ந்தது.

200 GB வரை மெமரியை நீட்டிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அடுத்த மாதம் இந்த மொபைல்கள் விற்பனைக்கு வரவுள்ளன என்று கூறப்படுகிறது.

அட்டகாசமான அம்சங்களுடன் Galaxy S7 மற்றும் Galaxy S7 Edge மொடல்களை அறிமுகப்படுத்திய சாம்சங் (வீடியோ இணைப்பு) அட்டகாசமான அம்சங்களுடன் Galaxy S7 மற்றும் Galaxy S7 Edge மொடல்களை அறிமுகப்படுத்திய சாம்சங் (வீடியோ இணைப்பு) Reviewed by ANBUTHIL on 4:05 PM Rating: 5
Powered by Blogger.