251 ரூபாயில் ஸ்மார்ட்ஃபோனா…? என அனைவரையும் ஷாக் ஆக வைத்த ஃப்ரீடம் 251 ஸ்மார்ட்ஃபோன், freedom251.com எனும் வலைதளத்தில், விற்பனைக்கு வந்துள்ளது. இன்று காலை முதலே, "Buy Now" என்கிற லிங்க் டிஸ்ப்ளே ஆக, அதை ஆர்வத்துடன் க்ளிக் செய்தால், நம் பெயர், முகவரி, ஊர், மாநிலம், பின்கோடு, மொபைல் எண், ஈ-மெயில் ஐடி போன்ற விவரங்கள் கேட்கப்படுகின்றன.
அனைத்தையும் பூர்த்தி செய்து, "Pay Now" என்கிற லிங்கில் க்ளிக் செய்தால், அந்த பக்கம் ரீலோட் ஆகி, மீண்டும், முதலில் இருந்து, பெயர், முகவரி… போன்ற விவரங்கள் கேட்கப்படுகின்றன. விவரம் கேட்கும் டப்பாக்கள் காலியாய் இருக்கின்றன. பத்து முறை திரும்பத்திரும்ப "Pay Now" பட்டனை அழுத்தினாலும், பேஜ் ரீலோட் ஆகிக் கொண்டே இருக்கிறது. இது கஸ்டமர்களை மிகவும் கடுப்பேற்றி தளத்தை விட்டு வெளியேறும் அளவுக்கு வெறுப்பை உண்டாக்கியது

ஃப்ரீடம் 251 கடுப்பேத்துறார் மை லார்ட்…! 

-ஜெ. விக்னேஷ் (மாணவர் பத்திரிகையாளர்)