மூடுவிழா காண்கிறது கூகுளின் மற்றுமொரு சேவை

உலகத்தை இணையம் எனும் ஒரு சொல்லால் ஆட்டிப் படைத்துவரும் கூகுள் நிறுவனம் அகலக் கால் பதித்து பல சேவைகளை அறிமுகம் செய்து அவற்றில் வெற்றியும் கண்டுள்ளது.இருந்தபோதிலும் அண்மைக் காலமாக தனது சில சேவைகளை நிறுத்துவதில் கூகுள் நிறுவனம் முனைப்புக் காட்டி வருகின்றது.

இவற்றின் வரிசையில் தற்போது காரணம் வெளிவிடப்படாத நிலையில் Google Compare எனும் சேவையையும் எதிர்வரும் மார்ச் 23ம் திகதி முதல் நிறுத்தவுள்ளது.

கடந்த வருடம் அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருந்த இச் சேவையின் ஊடாக கிரடிட் கார்ட் ரேட், கார் இன்சூரன்ஸ், அடமானங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களின் விலைவாசிகளை ஒப்பிடக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூடுவிழா காண்கிறது கூகுளின் மற்றுமொரு சேவை மூடுவிழா காண்கிறது கூகுளின் மற்றுமொரு சேவை Reviewed by அன்பை தேடி அன்பு on 9:00 PM Rating: 5
Powered by Blogger.