அதிவேக "கூகுள் பிளஸ்" அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்யும் கூகுள்

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட 'கூகுள் பிளஸ்' சமூக வலைத்தளமானது மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.இச்சேவையினை மொபைல் சாதனங்களில் இலகுவாக பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்களும் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் அன்ரோயிட் சாதனங்களுக்கான புதிய பதிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

Google+ 7.3.0 எனும் இப் புதிய பதிப்பானது இணையத்தள பக்கங்களை விடவும் வேகமாக செயற்படக்கூடியதாக இருப்பதுடன், பத்திற்கும் மேற்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அப்பிளிக்கேஷனை தற்போது கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
அதிவேக "கூகுள் பிளஸ்" அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்யும் கூகுள் அதிவேக "கூகுள் பிளஸ்" அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்யும் கூகுள் Reviewed by ANBUTHIL on 3:05 PM Rating: 5
Powered by Blogger.