computer
உங்களுடைய கணினியின் சிக்கல்களை தனாக சரி செய்யும் மென்பொருள்
நான் இன்றைக்கு எழுதப்போகும் பதிவு பற்றி ஏற்கனவே பலரும் அறிந்திருப்பீர்கள் , இருந்தாலும் புதிதாக கணினி வாங்கியுள்ள சகோதரர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவை எழுதுகின்றேன்.
இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது Microsoft ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ள ஒரு அருமையான இலவச மென்பொருளை பற்றியாகும். உங்களுடைய கணினியில் ஏதேனும் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக கீழே உள்ள இந்த Link ஐ Click செய்து Microsoft ன் இலவச பிரச்சினை தீர்வு மையத்திற்கு செல்லவும்.
நிறுவியவுடன் கீழே உள்ளது போன்று ஒரு விண்டோ திறக்கும், அதில் Accept என்பதை Click செய்யவும்.
பின்னர் மற்றுமொரு விண்டோ திறக்கும், அதில் Detect Problems And Let Me Select The Fixes To Apply என்பதை Click செய்யவும்.
அவ்வளவுதான் மறுபடியும் ஒரு விண்டோ தோன்றும், அதில் உங்கள் கணினியில் உள்ள சரி செய்யப்பட்ட பிழைகளின் விவரங்களை காண்பிக்கும்.