ரூ.999க்கு யுஃபிட்னஸ் பேன்டு விற்பனைக்கு வருகின்றது..!

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் யு டெலிவென்ச்சர்ஸ் யுஃபிட் பிட்னஸ் ட்ராக்கர் கருவியை அறிமுகம் செய்துள்ளது. ஜூலை மாதம் 29ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கும் இந்த கருவியின் விலை ரூ.999 என்றும் இந்த கருவி அமேசான் தளத்தில் மட்டும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

யுஃபிட் கருவியை வாங்குவதற்கான முன்பதிவுகள் இம்மாதம் 21 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு முன்பதிவு செய்யும் முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஹெல்திஃபை பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இதற்கான கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.1,800 முதல் துவங்கி ஆண்டுக்கு ரூ.10,000 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.

 யுஃபிட் கருவியில் ஓஎல்ஈடி டிஸ்ப்ளே, நடக்கும் தூரத்தை ட்ராக் செய்வது, தூக்கத்தை ட்ராக் செய்வது மட்டுமில்லாமல், இன்கமிங் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் குறித்த நோட்டிபிகேஷன்கள் வழங்கப்படுவதோடு யுஃபிட் செயலியுடன் இணைந்து வேலை செய்யும். 

இந்த செயலி ஹெல்திஃபைமீ சேவையுடன் இணைந்து பேன்டு கருவியில் சேகரிக்கப்பட்ட தகவல்களை ஏற்ப பரிந்துரைகளை வழங்கும் இந்திய உணவுகளில் இருக்கும் கலோரிகளை கணக்கிடும் முதல் கருவி இது என்பதோடு உங்களது உடல் எடை குறித்த தகவல்களையும், உடற்பயிற்சி சார்ந்த குறிப்புகள் மற்றும் பல குறிப்புகளை வழங்கும்.
ரூ.999க்கு யுஃபிட்னஸ் பேன்டு விற்பனைக்கு வருகின்றது..! ரூ.999க்கு யுஃபிட்னஸ் பேன்டு விற்பனைக்கு வருகின்றது..! Reviewed by அன்பை தேடி அன்பு on 11:43 AM Rating: 5
Powered by Blogger.