விண்டோஸ் 10 தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் புதிய இணையப்பக்கத்தை மைக்ரோசோப்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் கணணிகளுக்கான மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக திகழ்ந்துவருகிறது.

இந்நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான விண்டோஸ் 10 இயங்குதளம் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் விண்டோஸ்10 இயங்குதளம் குறித்த புதிய மேம்படுத்தல்கள், தகவல்கள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு ஒரே இடத்தில் வழங்க மைக்ரோசோப்ட் நிறுவனம் முடிவு செய்திருந்தது.

தற்போது இதற்காக புதிய இணையப்பக்கத்தை வெளியிட்டுள்ளது. இந்த பக்கத்தில் விண்டோஸ்10 குறித்த அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.

மேலும் அங்கீகாரம், மேம்படுத்தல்களை நிறுவுதல், மற்றும் இயங்குதளத்தை நிறுவுதல் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது குறித்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மைக்ரோசோப்ட் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, எங்கள் வாடிக்கையாளர்களையும் அவர்களின் கருத்துகளையும் இணைப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

இதன் காரணமாக விண்டோஸ்10 மேம்படுத்தல் குறித்த பல்வேறு தகவல்களை விண்டோஸ் மேம்படுத்தல் பக்கத்தில் தெரிவிக்கவுள்ளோம்.
எனவே மேம்படுத்தல் போன்ற முக்கிய தகவல்களின் சுறுக்கங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் முழு தகவலையும் அறிந்துகொள்ளலாம்.

மேம்படுத்தல் குறித்த புதிய அறிவிப்புகள் வெளியாகும் போதெல்லாம் இந்த பக்கம் புதுப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.