ப்ளூடூத், USB வசதியுடன் ஜீப்ரானிக்ஸின் புதிய 4.1 ஸ்பீக்கர்

ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் புதிய 4.1 ஸ்பீக்கர் மாடலை (ZEB-BT4441RUCF) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பீக்கர் உள்நாட்டு தயாரிப்பாகும்.ஜீப்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய மாடலில் 4 ஸ்பீக்கர்களும், 1 சப் வூஃபரும் அமைந்துள்ளது. 60 வாட்ஸ் RMS ஒலித் திறன், ப்ளூடூத் வசதி, ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டுள்ள FM ரேடியோ, USB மற்றும் SD/MMC பயன்படுத்த வசதி உள்ளன. சுவரில் மாட்டக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது அனைத்தையும் ரிமோட்டில் கட்டுப்படுத்தக்கூடிய வசதியுடன் வருகிறது. இதன் மல்ட்டிமீடியா கண்ட்ரோலர் மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆகியவை சப்வூஃபரின் முன்பக்கம் வைக்கப்பட்டுள்ளன. மாஸ்டர் வால்யூம் மற்றும் பேஸ் கண்ட்ரோலர் ஆகியவையும் சப்வூஃபரின் பின்பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது சில்லரை மற்றும் இணையதள ஸ்டோர்களிலும் கிடைக்கிறது. இது ஜீப்ரானிக்ஸ் வழங்கும் 1 வருட உத்திரவாதத்துடன் வருகிறது. இந்த ஸ்பீக்கரின் விலை ரூ.2929/

சமீபத்தில் SME சேனல்கள் மூலமாக வழங்கப்பட்ட ஒலி/ஒளி தயாரிப்புகளுக்கான “மேட் இன் இந்தியா” விருதினை ஜீப்ரானிக்ஸ் வென்றது குறிப்பிடத்தக்கது
ப்ளூடூத், USB வசதியுடன் ஜீப்ரானிக்ஸின் புதிய 4.1 ஸ்பீக்கர் ப்ளூடூத், USB வசதியுடன் ஜீப்ரானிக்ஸின் புதிய 4.1 ஸ்பீக்கர் Reviewed by அன்பை தேடி அன்பு on 8:17 PM Rating: 5
Powered by Blogger.