உங்கள் தேடுதலை எளிமையாக்கும் கூகுள் INBOX ஆப்

கூகுள் நிறுவனம் பயனாளர்களின் நன்மைக்காக தனது ஜிமெயில் INBOX ஆப்பில் தேடுதலை எளிமையாக்கியுள்ளது.நமது இமெயில் கணக்கில் ஆயிரக்கணக்கான இமெயில்களை டெலிட் செய்யாமலேயே நாம் இருந்துவிடுவோம்.திடீரென ஒரு முக்கியமான இமெயிலை தேடும்போது தவித்துபோவோம்.

இதற்காகவே கூகுள் நிறுவனம் இன்பாக்ஸ் ஆப்பை தயாரித்தது. இதன் மூலம் முக்கிய மெயில்களை நாம் எளிதாக தேர்ந்தெடுக்க முடிந்தது.

மேலும் snooze செய்து தேவையான நேரத்தில் மெயில்களை வாசிக்கும் வசதியும் ஏற்படுத்தி கொடுத்தது.

இந்நிலையில் பயனாளர்களுக்கு மேலும் வசதிகயை ஏற்படுத்தி தரும் விதத்தில் கூகுள் நிறுவனம் இன்பாக்ஸ் ஆப்பில் மாற்றம் செய்துள்ளது

அதன்படி நீங்கள் ஏதாவது ஒரு முக்கிய தகவலை தேட முயன்றால் அது தொடர்பான தகவல்கள் என பல தகவலை தராமல் நாம் தேடிய தகவலையே அளிக்கும்

எடுத்துக்காட்டாக நீங்கள் உணவகம்(HOTEL) என்று டைப் செய்தால் உங்கள் மெயிலில் உணவகம் தொடர்பாக உள்ள தகவல் முன்னால் வந்து நிற்கும்.

இதனால் குப்பைபோல் உள்ள இன்பாக்ஸில் நீங்கள் குறிப்பிட்ட மெயிலை தேட தேவையில்லை.

இதனால் உங்கள் நேரம் மற்றும் உழைப்பு ஆகியவை மிச்சப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் தேடுதலை எளிமையாக்கும் கூகுள் INBOX ஆப் உங்கள் தேடுதலை எளிமையாக்கும் கூகுள் INBOX ஆப் Reviewed by அன்பை தேடி அன்பு on 7:44 PM Rating: 5
Powered by Blogger.