மிகப்பெரிய இணையத்தேடல் மற்றும் மின்னஞ்சல் சேவையை வழங்கும் நிறுவனங்களுள் கூகுள், யாகூ என்பன போட்டி போட்டு செயற்பட்டு வருகின்றன.எனினும் யாகூ நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்ட யாகூ மெயில் அப்பிளிக்கேஷனில் கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலினையும் பயன்படுத்தக்கூடிய வசதியை தந்துள்ளது.

இதேவேளை டெக்ஸ்டாப் கணினிகளில் பயன்படுத்தப்படும் இணைய உலாவிகளிலும் இந்த வசதியினைப் பெற முடியும் என யாகூ நிறுவனம் தெரிவித்துள்ளது.


இது தவிர ஜிமெயில் தவிர்ந்த Outlook.com, Hotmail மற்றும் AOL Mail என்பவற்றினையும் யாகூ மெயில் அப்பிளிக்கேஷன் ஊடாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.