உலகப் புகழ்பெற்ற அமேஷான் நிறுவனமானது அமேஷான்(AMAZON) கிளவுட் ட்ரைவ் எனும் ஆன்லைன் சேமிப்பு வசதியினை வழங்குவது அறிந்ததே.இச் சேவையின் ஊடாக தற்போது வெறும் 5 டாலர்களில் வரையறையற்ற சேமிப்பு வசதியினை ஒரு வருடத்திற்கு வழங்குவதற்கு அந்நிறுவனம் முன்வந்துள்ளது.


இதற்கு முன்னர் சாதாரண சந்தா தொகையாக வருடாந்தம் 60 டாலர்கள் செலுத்தவேண்டியிருந்த நிலையிலேயே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இது பயனர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருப்பதுடன், இச் சேவையின் ஊடாக புகைப்படங்கள், வீடியோக்கள், கோப்பு வகைகள் என்பன உட்பட பல தரவுகளை ஆன்லைனில் சேமிக்கக் கூடியதாக இருக்கும்.