google drive
Whatsapp குறுந்தகவல்கள், படங்களை இனி கூகுள் ட்ரைவில் சேமிக்கலாம்
ஆண்டிராய்டில் இயங்கும் ஸ்மார்ட் போன்களின் Whatsapp அரட்டை, குறுந்தகவல்கள், புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை கூகுள் ட்ரைவில்(Google Drive) சேமித்துப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
அதோடு, வேறொரு புதிய சாதனத்துக்கும் அதை இடமாற்றம் செய்துகொள்ள முடியும்.இந்த புதிய வசதி இன்னும் சில மாதங்களில் நடைமுறைக்கு வரும். ஆகவே Whatsapp செட்டிங்ஸ்(Seetings) பக்கத்தை அடிக்கடி பரிசோதியுங்கள்".
Whatsapp நிறுவனமும் இதே தகவலைப் பகிர்ந்துள்ளது.உங்களின் குறுஞ்செய்திகள் மற்றும் படங்களை, கூகுள் நிறுவனத்தில் சேமித்து வைக்கலாம்.உங்களின் செல்பேசி தொலைந்துவிட்டாலோ அல்லது நீங்கள் வேறு ஸ்மார்ட்போனுக்கு மாறினாலோ, உங்களின் சாட் தகவல்கள் பத்திரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.