பேஸ்புக்கில் பிடித்த இசையையும் ஷேர் செய்யலாம் புதிய வசதி அறிமுகம்

பேஸ்புக்கில் இசையை ஷேர் செய்யும் புதிய வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.உலகளவில் பல கோடி பேரால் பயன்படுத்தப்பட்டு வரும் பேஸ்புக்கில் இதுவரை புகைப்படம், வீடியோக்கள் ஷேர் செய்யும் வசதிகள் இருந்து வருகிறது.இந்நிலையில், இசையை ஷேர் செய்யும் புதிய வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.


"மியூசிக் ஸ்டோரிஸ்"(Facebook Music Stories) என அழைக்கப்படும் இந்த வசதியால் எளிதாக பாடல்கள் மற்றும் இசையை ஷேர் செய்து கொள்ள முடியும்.


தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய வசதி, முதலில் அப்பிள் ஐபோன்களில் மட்டுமே செயல்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வசதியின் மூலம் இசையை கேட்கும் தளத்திலிருந்து ஒருவர் நேரடியாக மியூசிக்கினை காப்பி செய்து பேஸ்புக்கில் ஷேர் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கில் பிடித்த இசையையும் ஷேர் செய்யலாம் புதிய வசதி அறிமுகம் பேஸ்புக்கில் பிடித்த இசையையும் ஷேர் செய்யலாம் புதிய வசதி அறிமுகம் Reviewed by ANBUTHIL on 7:31 AM Rating: 5
Powered by Blogger.