கூகுள் டாக்ஸில் புதிய வசதி

இணையம் வழியே டைப் செய்து ஆவணங்களை உருவாக்கிக்கொள்ள உதவும் கூகுள் டாக்ஸ் சேவையில் புதிய வசதி அறிமுகமாகியிருக்கிறது. வாய்ஸ் டைபிங் எனப்படும் குரல் வழி டைப் வசதிதான் அது. ஆக, இனி கூகுள் டாக்சில் டைப் செய்ய வேண்டும் என்றில்லை; டைப் செய்ய வேண்டிய வாசகங்களை வாய் மூலமாக டிக்டேட் செய்தாலே போதுமானது.

இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள குரோம் பிரவுசரின் செட்டிங் பகுதிக்குச் சென்று வாய்ஸ் டைப்பிங் அம்சத்தைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். அதன் பிறகு பேசத் தொடங்கினால் போதும் எழுத்துக்கள் தானாக டைப் ஆகும்.

இது தவிர ஆவணங்களிலிருந்து தொடர்புடைய தகவல்களைத் தேடும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. குரல் வழி டைப்பிங்கைப் பொறுத்தவரை ஆங்கிலம் உள்ளிட்ட 40 மொழிகளில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது. இந்திய மொழிகளில் இந்தி இடம்பெற்றுள்ளது. தமிழை விரைவில் எதிர்பார்க்கலாமா?

வாய்ஸ் டைப்பிங் பற்றி அறிய: https://support.google.com/docs/answer/4492226?hl=en
கூகுள் டாக்ஸில் புதிய வசதி கூகுள் டாக்ஸில் புதிய வசதி Reviewed by ANBUTHIL on 10:43 AM Rating: 5
Powered by Blogger.