facebook
Face Bookல் இனி மற்றவர்களின் வீடியோக்களை திருடி பதிவேற்ற முடியாது
ஃபேஸ்புக்கில் இனி மற்றவர்கள் வடிவமைத்த வீடியோக்களை நம் ப்ரொஃபைலில் பதிவேற்றம் செய்து லைக் மற்றும் ஷேர்களை பெற இயலாது. காரணம் ’video-matching tool' என்னும் பிரத்யேக அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது ஃபேஸ்புக்.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக வீடியோவை வடிவமைத்தவர்கள், தங்கள் வீடியோக்களை யாரேனும் திருடி பதிவேற்றம் செய்துள்ளார்களா என்பதை கண்டறிய முடியும். அவ்வாறு திருடப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்த பதிவைப் பற்றி ஃபேஸ்புக்கில் புகார் செய்து அதை நீக்கிவிட முடியும்.
தற்போது யூ-ட்யூபில் ஒரு பயனரின் வீடியோ, அவரின் அனுமதியின்றி மற்றொருவர் பதிவேற்றம் செய்திருந்தால், கூகுள் தானாக அந்த வீடியோவை நீக்கி, அதை பதிவேற்றியவருக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பிவிடும். ஆனால் ஃபேஸ்புக் அறிமுகப்படுத்த உள்ள விடியோ மேட்சிங் மூலம், வீடியோவின் உரிமையாளர்களே தங்கள் வீடியோக்கள் திருடப்பட்டிருக்கிறதா என்பதை கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி நியூஸ் 7