website
இந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் காண
இணையம் வாசகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் இணையதளங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. நம் இந்திய அரசும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மற்றும் மாவட்டங்களுக்கும் தனித்தனி இணையதளங்களை உருவாக்கி தங்கள் தகவல்களை இணையத்தில் வெளியிட்டு கொண்டுள்ளன.
இந்த இணையதளங்கள் அனைத்தயும் URL நாம் ஞாபகம் வைத்து கொள்ள முடியாது. உதாரணமாக இந்தியாவில் 627 மாவட்டங்கள் உள்ளது இதில் 569 மாவட்டங்களுக்கு தனி இணையதளங்கள் உள்ளது. இதை எல்லாம் நாம் ஞாபகம் வைத்து கொள்வது கடினம். ஆனால் இதை எல்லாம் ஒரே இடத்தில் காணும் வசதியாக நம் அரசாங்கம் ஒரு தளத்தை உருவாக்கி செயல் படுத்தி வருகிறது.
Districts என்ற தளத்தில் இந்திய மாவட்டங்களின் இணையதளங்களின் பட்டியலை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

