விரைவான குறுஞ்செய்திகளை அனுப்புதல் உட்பட வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளக்கூடிய வசதிகளைத் தரும் WhatsApp சேவையினைப் பெற்றுக்கொள்வதற்கு அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றன.இந்த அப்பிளிக்கேஷன் ஆனது ஒவ்வொரு வகையான மொபைல் சாதனங்களுக்காகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை அறிந்ததே.

இவ்வாறிருக்கையில் iOS சாதன பாவனையாளர்கள் WhatsApp சேவையினை நேரடியாக இணைய உலாவியின் ஊடாக இணையத்தளம் மூலம் பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.

பேஸ்புக்கினால் நிர்வகிக்கப்பட்டுவரும் இச் சேவையினை இணையத்தளத்தில் பயன்படுத்தும் வசதி Android, BlackBerry மற்றும் Windows Phone ஆகிய இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களுக்கு இவ் வருட ஆரம்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

எனினும் iOS சாதனங்களுக்காக பல மாதங்களின் பின்னர் தற்போது குறித்த வசதி தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வசதியினைப் பெறுவதற்கு https://web.whatsapp.com/ எனும் இணைய முகவரிக்கு சென்று தரப்பட்டுள்ள QR Code இனை ஸ்கான் செய்துகொள்ள வேண்டும்.