ஜிமெயில் மூலம் பணம் அனுப்ப முடியும்!

ஜிமெயிலின் வாலட் சர்வீஸ் அனைவரும் அறிந்ததே. இப்போது ஜிமெயிலின் வாலட் இன்னுமொரு புது வசதியை செய்திருக்கிறது. அதாவது இனி உங்களது தெரிந்த / தெரியாத நண்பர்களுக்கும் பணம் ஜஸ்ட் ஒரு ஈமெயிலிலே அனுப்ப முடியும். 

அதாவது கம்போஸ் பட்டனை அழுத்தும் போது கீழே டாலர் சிம்பல் வரும் அதன் மூலம் எவ்வளவு அனுப்ப வேண்டுமோ அவ்வளவு அனுப்பினால் உங்கள் கிரடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கில் (ஏற்கனவே படத்தில் காட்டியிருப்பது போல் உள்ள ரெஜிஸ்ட்டர் செய்த வங்கி கணக்கு) இருந்து கழித்து கொள்வார்கள் அது போக இதற்க்கு சர்வீஸ் சார்ஜ் இல்லை.
அதே போல் உங்களுக்கு வரும் அமவுன்ட்டையும் இதே மாதிரி உங்கள் வங்கி கணக்கில் ஒரு நிமிடத்தில் வரவு வைத்து கொள்ள முடியும். இதனால் இதே சர்வீஸை செய்து வரும் பேபால் போன்ற கம்பெனிகளுக்கு பெரும் ஆப்பு. ஜிமெயில் அக்கவுன்ட் இல்லாதவர்களும் கூட இதை பாவிக்க முடியும் என்பது அடிசினல் தகவல்!.

வீடியோவை பாருங்கள் 

ஜிமெயில் மூலம் பணம் அனுப்ப முடியும்! ஜிமெயில் மூலம் பணம் அனுப்ப முடியும்! Reviewed by அன்பை தேடி அன்பு on 5:57 PM Rating: 5
Powered by Blogger.