பி.எஸ்.என்.எல். நிறுவனம், இந்தியாவின் 69 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தங்கள் செல்பேசி பயனர்களுக்கு, பல இண்டெர்னெட் பேக், சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு, இணையத் திட்டங்களில் (Internet packs) பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதை குறித்து பி.எஸ்.என்.எல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

1. 561 ரூபாய் மதிப்புள்ள ஸ்பெஷல் டாரிஃப் திட்டத்தின் (Special Tariff Vouchers) காலக்கெடு 60 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

2. 821 ரூபாய் , 1,011 ரூபாய், 1,949 ரூபாய் உள்ளிட்ட ஸ்பெஷல் டாரிஃப் திட்டத்தின் காலக்கெடு 90 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

3. 53 , 78, 96, 198, 253, 451 ஆகிய மதிப்பில் இணைய வசதியைப் பெற ரீசார்ஜ் செய்தால், 10 சதவீதம் கூடுதல் இணையப் பயன்பாட்டை பெறலாம்.

4. 69 ருபாய் மதிப்புள்ள காம்போ வவுச்சரில், 49 ரூபாய்க்கான டாக் டைம், 59 இலவச எஸ்.எம்.எஸ் சேவை மற்றும் 69MB இண்டெர்நெட் வழங்கப்படுகிறது. 

5. 26 ரூபாய் மதிப்புள்ள வவுச்சரில், 26 ரூபாய்க்கான டாக் டைம், நான்கு நாட்களுக்கான காலக்கெடு. 

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் பி.எஸ்.என்.எல் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டு வருகிறது, இந்நிலையில் வாடிக்கையாளர்களை கவரும் இந்த சலுகைகள் மூலம் பி.எஸ்.என்.எல் பயனர்கள் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிறப்புச் சலுகைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு http:tamilnadu.bsnl.co.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.