website
மத்திய அரசு தடை செய்த இந்தியாவில் நீங்கள் பார்க்கமுடியாத 857 இணையதளங்கள்
இந்தியாவில் அதிக அளவில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு அடிப்படை காரணங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் பாலியல் இணையதளங்களை மத்திய அரசு நேற்று திடீரென தடை செய்தது. அதனைத் தொடர்ந்து "அந்த மாதிரி" இணையதளங்களைப் பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், தங்கள் கோபத்தை, சமூக வலைதளங்களில் கண்டனமாக பதிவு செய்து திட்டித் தீர்த்து வருகின்றனர். நேற்று முன் தினம் முதல் பாலியல் இணையதளங்களில் வழக்கமாகக் காணப்படும் வீடியோ காட்சிகளுக்குப் பதிலாக ஒன்றுமே இல்லாமல் வெறும் காற்று மட்டும்தான் வருகிறது.. அதாவது வெற்று ஸ்கிரீன் மட்டும் தெரிந்தது.