கூகுள் குரோமை விட 112% அதிக வேகம் கொண்ட மைக்ரோசாப்ட் 'எட்ஜ்' பிரவுசர்

தற்போது இணையதளங்களில் உலவுவதற்கு வசதியாக இருக்கும் பிரவுசர்களில் கூகுள் குரோம் பிரவுசரே உலகெங்கிலும் பாப்புலராக இருந்து வருகிறது. வரும் 29-ந்தேதி புதிதாக வெளிவர உள்ள மைகரோசாப்டின் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் அதிவேக பிரவுசர் ஒன்று புதிதாக இணைக்கப்படுகிறது. அதற்கு 'எட்ஜ்' என பெயரிடப்பட்டுள்ளது. 

விரைவில் வெளிவர உள்ள இந்த அதிவேக பிரவுசர் கூகுள் குரோமுக்கு போட்டியாக இருக்கும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், விண்டோஸ் தனது வலைத்தளத்தில் எட்ஜ் பிரவுசரை பற்றி பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.

கூகுள் ஆக்டேன், ஆப்பிள் ஜெட்ஸ்டிரீம், வெப்கிட் சன்ஸ்பைண்டர், சபாரி உள்ளிட்ட பிரவுசர்களுடன் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இதில், மற்றவைகளை விட குறிப்பாக கூகுள் குரோமை விட மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசர் 112% அதிக வேகத்துடன் இயங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் குரோமை விட 112% அதிக வேகம் கொண்ட மைக்ரோசாப்ட் 'எட்ஜ்' பிரவுசர் கூகுள் குரோமை விட 112% அதிக வேகம் கொண்ட மைக்ரோசாப்ட் 'எட்ஜ்' பிரவுசர் Reviewed by ANBUTHIL on 9:00 AM Rating: 5
Powered by Blogger.