அஸ்தமனத்தை நோக்கி Google+ Photos

கூகுள் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் Google Photos எனும் பிரத்தியேக அப்பிளிக்கேஷன் ஒன்றினை அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகம் செய்திருந்தது.இதற்கு காரணம் Google + சமூக வலைத்தளத்தினூடாக புகைப்படங்களை பகிரும் சேவையை எதிர்வரும் ஆகஸ்ட் முதலம் திகதி நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச் சேவை நிறுத்தமானது முதலில் அன்ரோயிட் சாதனங்களில் ஆரம்பித்து iOS சாதனங்கள், இணையத்தளங்கள் என்பவற்றிலும் எதிர்வரும் மாதங்களில் தொடரவுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அப்பிளிக்கேஷனில் எல்லையற்ற சேமிப்பு வசதி, பேக்கப், எடிட், புகைப்படங்களை பகிருதல் போன்ற பல வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இப் புதிய அப்பிளிக்கேஷனை நிறுவி கூகுள் பிளஸ் தளத்திலுள்ள புகைப்படங்களை பேக்கப் செய்வதன் ஊடாக அவற்றினை பாதுகாத்துக்கொள்ள முடியும்.


அஸ்தமனத்தை நோக்கி Google+ Photos அஸ்தமனத்தை நோக்கி Google+ Photos Reviewed by ANBUTHIL on 7:08 PM Rating: 5
Powered by Blogger.