இந்தியாவில் நீங்கள் பார்க்கமுடியாத சில இணையதளங்கள்

தீவிரவாதிகள் தொடர்பான தகவல்களைப் பரப்பியதற்காக, மத்திய அரசு 32 இணைய தளங்கள் இயக்கத்தினை முடக்கி வைத்துள்ளது. இவற்றில் GitHub, Internet Archive, Pastebin, மற்றும் Vimeo ஆகியவை அடங்கும். இவற்றை இந்தியாவில் இயங்கும் எவரும் தொடர்பு கொள்ள இயலாது. இவற்றை முடக்குவதற்கான ஆணை சென்ற டிசம்பர் 17ல் வெளியிடப்பட்டது.


தகவல் தொடர்பு சட்டம், 2000ன் பிரிவு 69 ஏ அடிப்படையில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. தடை செய்யப்பட்ட 32 தளங்களின் பெயர்கள் பின்வருமாறு: 


justpaste,it, 
hastebin.com, 
codepad.org, 
pastie.org, 
pastee.org, 
paste2.org, 
slexy.org, 
paste4btc.com, 
0bin.net, 
heypasteit.com, 
sourceforge.net/projects/phorkie, 
atnsoft.com/textpaster, 
archive.org, 
hpage.com, 
ipage.com, 
webs.com, 
weebly.com, 
000webhost.com, 
freehosting.com, 
vimeo.com, 
dailymotion.com, 
pastebin.com, 
gist.github.com, 
ipaste.eu, 
thesnippetapp.com, 
snipt.net, 
tny.cz (Tinypaste), 
github.com (gist-it), 
snipplr.com, 
termbin.com, 
snippetsource.net, 
cryptbin.com.


இவற்றில் GitHub என்ற தளத்தை முடக்கியது பலருக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. ஏனென்றால், இந்தியாவில் சாப்ட்வேர் புரோகிராம் வடிவமைப்பவர்கள், இந்த தளத்தை அதிகம் பயன்படுத்தி, பயன்பெற்று வந்தனர். 


ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகளைத் தடுப்பதே இந்த ஆணையின் முதன்மை நோக்கம் என அரசு அறிவித்துள்ளது.


Vimeo தள நிர்வாகிகள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், தாங்கள் தீவிரவாத கருத்துகளை உடனே நீக்கிவிட்டதாகவும், ஆனாலும், அரசு தடை செய்துவிட்டது என்று கூறியுள்ளது. தங்களிடம் இது குறித்து முன் கூட்டியே அறிவிக்கவில்லை என்றும் குறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நீங்கள் பார்க்கமுடியாத சில இணையதளங்கள் இந்தியாவில் நீங்கள் பார்க்கமுடியாத சில இணையதளங்கள் Reviewed by அன்பை தேடி அன்பு on 6:30 PM Rating: 5
Powered by Blogger.