இணையம் மூலம் போட்டோ டிசைன்

புகைப்படங்களை டிசைன் செய்ய பல்வேறு மென்பொருள்கள் தற்பொழுது பயன்பாட்டில் உள்ளன. அவைகளைப் பயன்படுத்த அந்த மென்பொருள்களைப் பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும். அந்த மென்பொருள்களில் உள்ள டூல்களைப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது அப்படியில்லை... போட்டோஷாப் பற்றிய அறிவு தேவையேயில்லை.


Photoshop தேவையில்லை

தற்காலத்தில் மென்பொருள்களின் துணை இல்லாமலேயே மிக எளிமையான போட்டோவை டிசைன் செய்வதற்கான வாய்ப்பினை வழங்குகிறது ஆன்லைன் போட்டோஷாப் டிசைன் தளங்கள். 

உங்களிடம் போட்டோஷாப் தொடர்பான மென்பொருள்கள் இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.. 


இணைய இணைப்பும், கணனியும் இருந்தால் உங்களுக்கு விருப்பமான முறையில்உங்களுடைய போட்டோக்களை நீங்களே டிசைன் செய்யலாம். 

போட்டோஷாப் டிசைன் செய்ய செல்ல வேண்டிய தளம் போட்டோ புனியா


Photo Design செய்யும் வழிமுறை: 


முதலில் இத்தளத்தில் உள்ள டிசைன்களில் ஏதேனும் ஒரு டிசைனை தேர்வு செய்யுங்கள்... 
பிறகு உங்களுடைய போட்டோவை அப்லோட் செய்யுங்கள்... பிறகு go என்பதை சொடுக்குங்கள்.. 
பிராசசிங் நடக்கும். 
இறுதியாக டிசைன் செய்யப்பட்ட போட்டோ உங்களுக்கு Save என்ற ஆப்சனுடன் போட்டோவை சேமிக்கும் வசதி கிடைக்கும். 
அவ்வாறு டிசைன் செய்யப்பட்டப் புகைப்பட்டத்தை சமூக இணைய தளங்களிலும் பகிர Share வசதியும் உண்டு. 
இணையம் மூலம் போட்டோ டிசைன் இணையம் மூலம் போட்டோ டிசைன் Reviewed by ANBUTHIL on 12:30 PM Rating: 5
Powered by Blogger.