INTERNET
ஒரே கிளிக்கிலேயே இன்டர்நெட் பிரச்னையை சரி செய்ய..!
இணையத்தைப் பயன்படுத்தாதவர்களே இன்று இல்லை என்று சொல்லலாம். அந்தளவிற்கு இணையத்தின் தேவை அத்தியாவசியமாகிவிட்டது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் இளைய தலைமுறைகள் இணையத்திலேயே காலத்தை கழிக்கின்றனர். அலுவலக வேலை முதல் அன்றாடம் பொழுதுபோக்குகளுக்குப் பயன்படும் அனைத்துமே இணையத்தில் உள்ளது.
இப்படிப்பட்ட முக்கியத்துவம் கொண்ட இந்த இணைய இணைப்பில் ஏதேனும் பிரச்னை எனில் நிச்சயம் டென்சன் எகிறவே செய்யும். அடிக்கடி இணையத் தொடர்பில் ஏதேனும் பிரச்னை ஏற்படும்பொழுது நீங்களாகவே கணினியில் இணையத் தொடர்பை ஏற்படுத்தும் அமைப்புகளில், மாற்றம் செய்ய முயற்சித்திருப்பீர்கள்.
அதுபோன்ற சூழ்நிலைகளில் உங்களையும் அறியாமல் இணைய இணைப்புத் தொடர்பான அமைப்பில் (Internet Settings) ஏதேனும் மாற்றங்களைச் செய்ய நேரிடும்.. அல்லது உங்களுடைய கணினியைப் பயன்படுத்தும் பிள்ளைகள் , நண்பர்கள் ஏதேனும் பிரச்னை உண்டு செய்திருப்பார்கள்.
இதனால் இன்டர்நெட் இணைப்புச் செட்டிங்சில் (Internet settings) மாற்றம் ஏற்பட்டுவிடும். இதுபோன்ற சூழலில் இணைய இணைப்பு விட்டு விட்டு வரும்...
சில நேரங்களில் குறிப்பிட்ட இணையப் பக்கங்கள் திறக்காமல் போய்விடும்..
மேற்கண்ட பிரச்னைகளை சரிசெய்து, இணைய இணைப்பிற்கான சரியான செட்டிங்சை மேற்கொள்ள பயன்படுகிறது ஒரு அருமையான மென்பொருள்.
மென்பொருளின் பெயர்: Complete Internet Repair Tool மென்பொருள்.
இது ஒரு போர்டபிள் மென்பொருளாகும்.
இது உங்களுடைய இன்டர்நெட் புரோட்டோகாலை ரீசெட் செய்கிறது.
Internet Explorer
Windows automatic updates
SSL/HTTPS/Cryptography
Workgroups Computers
ஆகியவற்றை ரிப்பேர் செய்கிறது.
இந்த மென்பொருள் மிக குறைந்தளவே CPU மெமரியை எடுத்துக்கொள்கிறது. இந்த மென்பொருளை பயன்படுத்தி ஒரே கிளிக்லேயே உங்களுடைய இன்டர்நெட் பிரச்னையை சரிசெய்யலாம்.
இன்டர்நெட் பிரச்னையைச் சரிசெய்ய பிரபல softpedia தளம் இம்மென்பொருள் பயனர்களுக்கு பரிந்துரைக்கிறது.
இம்மென்பொருள் இயங்க உங்கள் கணினிக்கு தேவையானவை -System Requirements:
2.33GHz or fater processor
512MB RAM
மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி: Download Complete Internet Repair Tool for windows 7