மொபைல் டேட்டாவை(internet data)சிக்கனமாக பயன்படுத்த சில எளிய வழிமுறைகள்

என்ன தான் இலவச வைபை பல இடங்களில் கிடைத்தாலும், சில சமயங்களில் முக்கியமான விஷயங்களுக்கு மொபைல் டேட்டாவை தான் நம்பி இருக்க வேண்டியுள்ளது. அவ்வாறு சரியான நேரத்தில் பயன்படுத்தும் போது பல முறை மொபைல் டேட்டா பேலன்ஸ் மிகவும் குறைவாக இருக்கும்.


தொலைதொடர்பு நிறுவனங்கள் எவ்வளவு பெரிய சலுகைகளை வழங்கினாலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு போதாது, கீழே உங்களது போனில் இருக்கும் மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்த சில எளிய வழிமுறைகளை பாருங்கள்.
                                  

புஷ் நோட்டிபிகேஷன் 

சமூக வலைதளங்கள் மற்றும் செயலிகளில் புஷ் நோட்டிபிகேஷன் அம்சமானது மொபைல் டேட்டாவை அதிகம் பயன்படுத்தும், முடிந்த வரை புஷ் நோட்டிபிகேஷன் சேவையை குறைவாக பயன்படுத்துவது நல்ல பலன்களை தரும். 

ட்ராக் டேட்டா 

இன்று ஆன்டிராய்டு, ஐஓஎஸ் என பெரும்பாலான இயங்குதளங்களில் எந்த செயலி அதிக டேட்டா பயன்படுத்துகின்றது என்பதை பார்க்கும் வசதியை அளித்துள்ளது. அது போன்ற செயலிகளுக்கு டேட்டா டிரான்ஸ்ஃபரை ஆஃப் செய்து வைப்பதும் நல்ல தீர்வை தரும். 

ஆட்டோ டவுன்லோடு 

இதை பின்பற்றினாலே அதிக படியான டேட்டாவை பாதுகாக்க முடியும். சிலர் வாட்ஸ்ஆப் செயலியில் பல குழுக்களில் உறுப்பினராக இருப்பர், அதனால் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவர்களுக்கு வரும். பெரும்பாலானோர் வாட்ஸ்ஆப் செயலியில் ஆட்டோ டவுன்லோடு ஆப்ஷனை ஆன் செய்து வைப்பர். இதனால் வாட்ஸ்ஆப் செயலிக்கு வரும் அனைத்து புகைப்படம் மற்றும் வீடியோக்களும் தானாக மொபைலுக்கு டவுன்லோடு ஆகி விடும். இதனால் அதிகப்படியான டேட்டா நிச்சயம் செலவாகும். 

ஆஃப்லைன் 

அதிகமாக யூட்யூப் மற்றும் பாடல்களை இன்டர்நெட் மூலம் கேட்பவர்கள், பாடல்களுக்கு ஏதேனும் இணைய சேவையை பயன்படுத்தினால் டேட்டா செலவு குறையும். மேலும் யூட்யூபிலும் ஆஃப் லைன் மோடு பயன்படுத்லாம். 

டேட்டா கம்ப்ரஷன் 

மொபைலில் டேட்டா கம்ப்ரஷன் பயன்படுத்தினால் குறைந்த அளவு டேட்டா மட்டுமே செலவாகும். கூகுள் க்ரோம் பிரவுஸரில் 'Reduce data usage' சேவையை பயன்படுத்தலாம். 

மொபைல் டேட்டா போன் பயன்படுத்தாத நேரத்தில் மொபைல் டேட்டாவை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மென்பொருள் 

மொபைலில் டேட்டா பயன்படுத்தும் மென்பொருள் மற்றும் செயலிகளை தேர்ந்தெடுக்கும் போது முடிந்த வரை அவை தரமானதா என்பதை உறுதி படுத்தி கொள்ளுங்கள். சில தரமற்ற செயலிகள் குறைந்த செயல்பாட்டிற்கே அதிக டேட்டா எடுத்து கொள்ளும்.
மொபைல் டேட்டாவை(internet data)சிக்கனமாக பயன்படுத்த சில எளிய வழிமுறைகள் மொபைல் டேட்டாவை(internet data)சிக்கனமாக பயன்படுத்த சில எளிய வழிமுறைகள் Reviewed by ANBUTHIL on 11:30 AM Rating: 5
Powered by Blogger.