அசத்தும் கூகுள் கீபோர்ட்டுக்கு குட்பை இனி கையாலே மெசேஜ் எழுதலாம்

நீங்கள் ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர் என்றால் இனி மெசேஜை உங்கள் கையாலேயே எழுதி அனுப்பலாம்.அதற்கான வசதியை கூகுள், ஹேன்ட்ரைட்டிங் இன்புட் (Google Handwriting Input ) எனும் புதிய செயலி (application) மூலம் அறிமுகம் செய்துள்ளது.தமிழ் உள்ளிட்ட 82 உலக மொழிகளில் இந்த வசதியை பயன்படுத்தலாம்.

ஸ்மார்ட்போனில் என்னதான் சூப்பர் கீபோர்ட்கள் வந்துவிட்டாலும் கூட, பலருக்கு டைப் செய்வது என்றால் எட்டிக்காய் சங்கதியாக இருக்கும்.
                                 
இன்னும் பலருக்கு என்ன இருந்தாலும் கையில் எழுதி அனுப்புவது போல வருமா? என்ற உணர்வும் இருக்கலாம்.

இந்த இரண்டு குறைகளையும் தீர்க்கும் வகையில் கூகுள், ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான கைவிரலிலேயே எழுதி அனுப்பும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

கையால் எழுதப்படும் எழுத்துக்கள் ஆப்டிகல் கேரக்டர் ரிகக்னேஷன் (optical character recognition) முறையில் புரிந்து கொள்வதன் அடிப்படையில் இந்த வசதி செயல்படுகிறது.

கூகுள் ஹேன்ட்ரைட்டிங் இன்புட் செயலி மூலம், டச் ஸ்கிரீனில் கைவிரலால் பக்குவமாக எழுதலாம் அல்லது ஸ்டைலாகவும் எழுதலாம்.

அதே சமயம் உங்கள் கையெழுத்து கிறுக்கலாக இருக்கும் என்ற கவலையே வேண்டாம். எந்த வகையான எழுத்துக்களையும் புரிந்து கொள்ளும்.

எழுத்துக்கள் மட்டும் அல்ல, இமேஜிகள் என சொல்லப்படும் ஐகான்களையும் (Icon) இதில் வரைந்து காட்டலாம்.

ஒரு முறை தரவிறக்கம் செய்துவிட்டால் இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பக்கம் பக்கமாக எழுத முடியாது, ஆனல் நச்சென்று நாலு வரிகளில் எழுதி அனுப்பலாம்.

ஏற்கனவே கூகுள் மொழிபெயர்ப்பு வசதியில் இது போன்ற அம்சம் இருக்கிறது. அதை ஆய்வு மூலம் விரிவாக்கும் இந்த வசதியை ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

இதனை கூகுள் பிளேஸ்டோரில் (Google Play Store) இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.


இதை பயன்படுத்துவது தொடர்பான விரிவான விளக்கங்களுக்கு:https://support.google.com/faqs/faq/6188721
அசத்தும் கூகுள் கீபோர்ட்டுக்கு குட்பை இனி கையாலே மெசேஜ் எழுதலாம் அசத்தும் கூகுள் கீபோர்ட்டுக்கு குட்பை இனி கையாலே மெசேஜ் எழுதலாம் Reviewed by ANBUTHIL on 11:00 AM Rating: 5
Powered by Blogger.