புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடும் இணையதளம்

உங்க கம்ப்யூட்டருக்குத் தேவையான புரோகிராமை அதுவே டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொடுக்கிறது ஒரு இணையதளம்.அந்த இணையதளத்தின் பெயர் நினைட்.காம். இந்த வெப்சைட்ல போய் உங்களுக்கு தேவையான புரோகிராமை டிக் அடிச்சிட்டு கடைசியில இருக்கிற Get Installer பட்டனை அமுக்கினா போதும்.

உடனே ஒரு EXE பைல் டவுன்லோட் ஆகும். அதை ஓப்பன் பண்ணி இன்ஸ்டால் பண்ணுங்க போதும்.

அந்த வெப்சைட்ல நீங்க என்னென்ன புரோகிராம் தேர்ந்தெடுத்தீங்களோ, அதை எல்லாத்தையும் இந்த இன்ஸ்டாலர் உங்களோட கம்ப்யூட்டர்ல டவுன்லோட் செய்து இன்ஸ்டாலும் செய்துடும்.

புது வெர்சனா அப்டேட்டிவ் சாப்ட்வேரா பார்த்து இன்ஸ்டால் செய்யும். இது நமக்கு ரொம்ப கெயினா இருக்கும்.

இலவசமான சாப்ட்வேர் கூட வர்ற டூல்ஸ், வைரஸ் இன்ன பிற வகையறாக்களை எல்லாம் ஓரங்கட்டிட்டு பியூரா என்ன சாப்ட்வேர் புரோகிராம் தேவையோ அதை மட்டும் இன்ஸ்டால் பண்ணுது...

இதுதான் இந்த வெப்சைட்டோட சிறப்பம் - ஸ்பெஷாலிட்டி.

யூஸ் பண்ணி பாருங்க... கண்டிப்பா யூஸ்புல்லா இருக்கும். சந்தேகமில்லை.

தமிழில்: 

நீங்கள் புதியதாக வாங்கிய கம்ப்யூட்டரில் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட பயன்படும் ஒரு பயன்மிக்க இணையதளம் நினைட். இந்த தளத்தில் சென்று, உங்களுக்குத் தேவையான புரோகிராம்களை தேர்ந்தெடுத்து "Get Installer" என்பதை கிளிக் செய்திட வேண்டும்.

                                  


உடனே உங்கள் கம்ப்யூட்டிரில் .exe பைல் தரவிறங்கும். அதை திறந்து இயக்கினால், நீங்கள் தேர்ந்தெடுத்த புரோகிராம்கள் டவுன்லோட் ஆகி இன்ஸ்டால் செய்யப்படும். 


புதியவர்களுக்கு இந்த தளம் மிக பயனுள்ளதாக இருக்கும். புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட மிகவும் நம்பகமான இணையதளம். 


புரோகிராம் தரவிறக்கி இன்ஸ்டாலும் செய்து கொடுக்கும் இந்த தளம் உண்மையிலேயே ஆச்சர்யமிக்கதுதான்.

இணையதளத்திற்கான சுட்டி: www.ninite.com
புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடும் இணையதளம் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடும் இணையதளம் Reviewed by ANBUTHIL on 11:00 AM Rating: 5
Powered by Blogger.