தவறாக அனுப்பிய குறுஞ்செய்திகளை அழிக்க உதவும் புதிய ஆப் அறிமுகம்

நியூயார்க்கின் ராகெம் என்ற நிறுவனம் தெரியாமல் மற்றவர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை அழிக்க உதவும் புதிய அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது.ஏதோ ஒரு கோபத்திலும், பதற்றத்திலும் மற்றவர்களுக்கு செய்திகளை அனுப்பி விட்டு வேதனையில் புலம்பிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

இவர்களுக்காக நியூயார்க்கின் “ராகெம்”(RakEM) என்ற நிறுவனம் புதிய அப்ளிகேஷனை வடிவமைத்துள்ளது.

இது பற்றி அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராகெடு (Raketu) கூறுகையில், தற்போது உள்ள ஸ்மார்ட்போன்களில் (Smart Phone) பாதுகாப்பு தோல்விகள், தினசரி தலைப்பு செய்தியில் இடம் பெறும் அளவிற்கு இருப்பதால், மக்கள் தங்களுடைய தொடர்புகளும், அந்தரங்கமும் பாதுகாக்கப்பட வேண்டுமென விரும்புகின்றனர்.
                                           
எனவே ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளோம்.

இதன் மூலம் தாங்கள் அனுப்பிய தேவையில்லாத செய்திகளை, ஒரே நேரத்தில் தங்களுடைய மற்றும் தாங்கள் அனுப்பிய நண்பருடைய செல்போனிலிருந்தும் நீக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இது செய்திகளை அழிக்கும் வசதி மட்டுமின்றி, தரவுகள், புகைப்படம், வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களில் வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை பாதுகாக்கும் முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தவறாக அனுப்பிய குறுஞ்செய்திகளை அழிக்க உதவும் புதிய ஆப் அறிமுகம் தவறாக அனுப்பிய குறுஞ்செய்திகளை அழிக்க உதவும் புதிய ஆப் அறிமுகம் Reviewed by ANBUTHIL on 6:58 PM Rating: 5
Powered by Blogger.