whatsup
வாட்ஸ் அப் பாதுகாப்பு டிப்ஸ்
வாட்ஸ்அப் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. அதே சமயம் அதில் பாதுகாப்பு குறித்தும் பல கேள்விகள் எழுந்து வருகிறது. உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பத்திரமாக வைத்துக்கொள்வது எப்படி.வாட்ஸ்அப்பில் பாதுகாப்புக்காக கடவுச் சொற்கள் போன்ற வசதி இல்லை. ஆனால் சாட் லாக், செக்யூர் சாட் போன்ற வேறு நிறுவனங்களில் ஆப்கள் பாதுகாப்பைத் தருகின்றன. அதை நீங்கள் பயன்படுத்தலாம்.
வாட்ஸ்அப்பில் பலர் பிரத்யேகமான நண்பர்களுடன் புகைப்படங்களைப் பகிர்வதுண்டு. இது மற்ற எல்லோருக்கும் தெரிந்துவிட வாய்ப்பு உண்டு. அதைத் தவிர்க்க, இ.எஸ்., பைல் எக்ஸ்ப்ளோரர் போன்ற தனி ஆப்களைப் பயன்படுத்தி, வாட்ஸ்அப்பில் உள்ள இமேஜஸ் மற்றும் வீடியோ கோப்புகளைக் கண்டுபிடியுங்கள். இவை ஒவ்வொன்றிற்குள்ளும் .nomedia என்ற கோப்பை உருவாக்குங்கள். இது மற்றவர்கள் உங்கள் புகைப்படத்தைப் பார்ப்பதைத் தடுக்கும்.
நீங்கள் கடைசியாக வாட்ஸ்அப்பை பயன்படுத்தியதைக் காட்டும் லாஸ்ட் சீன் என்ற வசதியை நீக்கிவிடுங்கள். உங்கள் போன் தொலைந்துவிட்டால், உடனே உங்கள் வாட்ஸ்அப் கணக்கை, வாட்ஸ்அப் இணைய தளத்திற்கு போய் ரத்து செய்யுங்கள்.