ட்விட்டர் மணி ஆர்டர்(பணம் அனுப்பும் வசதி )

சமீபத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, தன் வாடிக்கையாளர்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பணம் அனுப்ப ஒரு எளிய விரைவான சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க்பே (icicibankpay) என்ற இந்த சேவையைப் பயன்படுத்த அந்த வங்கியின் @icicibank என்ற ட்விட்டர் ஹேண்டிலை ஒருவர் தன் ஸ்மார்ட் போன் மூலம் பின்தொடர்ந்தால் போதும். 
                               
பணம் அனுப்ப விரும்புபவர், பணம் பெறுபவரின் கணக்கு எண்ணையும் அனுப்ப விரும்பும் தொகையையும் நேரடியாக ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு வவுச்சர் போல அனுப்பலாம். உடனே வங்கி ஒரு பாஸ்வேர்டை அனுப்பும். அந்த பாஸ்வேர்டை பணம் அனுப்புபவர் பெறுபவருக்கு அனுப்பிவிட்டால், அவர் அதை பயன்படுத்தி பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
ட்விட்டர் மணி ஆர்டர்(பணம் அனுப்பும் வசதி ) ட்விட்டர் மணி ஆர்டர்(பணம் அனுப்பும் வசதி ) Reviewed by ANBUTHIL on 8:56 PM Rating: 5
Powered by Blogger.