டைசன் சிஸ்டத்தில் Samsung இஸட் ஒன் விலை ரூ. 5,700

சாம்சங் நிறுவனம், டைசன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய முதல் மொபைல் போனை Z130H என்ற பெயரில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ. 5,700. இதன் திரை 4 அங்குல அளவில் WVGA டிஸ்பிளே கொண்டதாக உள்ளது. இதன் டூயல் கோர் ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. 

டைஸன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 2.3 இதில் செயல்படுகிறது. இதில் 3.1 எம்.பி. திறனுடன் இயங்கும் கேமரா பின்புறமாக இயங்குகிறது. முன்புறமாக வி.ஜி.ஏ. கேமரா ஒன்று தரப்பட்டுள்ளது. இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். இதில் 3ஜி நெட்வொர்க்கினை இயக்கலாம்.

                                        
இதில் தரப்பட்டுள்ள Ultra Power Saving Mode பயன்படுத்தி, இதன் பேட்டரியின் திறனைக் காக்கலாம். இந்த போனில் Club Samsung அணுக இலவச அனுமதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏறத்தாழ 27,000 பாடல்களைத் தரவிறக்கம் செய்திட முடியும். மேலும் 80 லைவ் டி.வி. சேனல்களைக் கண்டுகளிக்கலாம்.

 இத்துடன் இன்னும் பல மியூசிக் இணைய தளங்களைப் பயன்படுத்த மூன்று மாதங்களுக்கு இலவச அனுமதி தரப்பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள சிறப்பு பட்டன் ஒன்றைத் தொடர்ந்து நான்கு முறை அழுத்தினால், இதனைப் பயன்படுத்துபவரின் முக்கிய தொடர்புகளுக்கு உதவி வேண்டி செய்திகள் அனுப்பப்படும். இந்த போனில், வைரஸ் எதிர்ப்பு புரோகிராம் பதியப்பட்டு கிடைக்கிறது. இது மின் அஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ். களில் இருக்கும் வைரஸ்களையும் கண்டறிகிறது.

இதனுடைய ராம் மெமரி 768 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 64 ஜி.பி. வரை உயர்த்தலாம். இதன் பரிமாணம் 120.4×63.2×9.7 மிமீ. எடை 112 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.1., ஏ ஜி.பி.எஸ். ஆகியவை இயங்குகின்றன.

வெள்ளை, கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களில் வந்துள்ள இந்த சாம்சங் மொபைல் போனை, ரிலையன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் வழியாக வாங்கினால், ஒவ்வொரு மாதமும் 500 எம்.பி. 3ஜி டேட்டா, ஆறு மாதங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்.
டைசன் சிஸ்டத்தில் Samsung இஸட் ஒன் விலை ரூ. 5,700 டைசன் சிஸ்டத்தில் Samsung இஸட் ஒன் விலை ரூ. 5,700 Reviewed by ANBUTHIL on 5:01 PM Rating: 5
Powered by Blogger.