online
சிறந்த ஆன்லைன் டிக்சனரி(அகராதி)
சொற்களின் பொருள்களை அறிவதற்கு நாம் பயன்படுத்துவது அகராதியை தான் . அகராதிகள் நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது . தினமும் நாம் கேள்விப் படும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் பொருள் அறிய அகராதியை நாட வேண்டி உள்ளது. அதிகமாக படிக்கும் காலங்களில் தான் அகராதியை பயன்படுத்துவோம் ஆனால் இன்றைய கால கட்டத்தில் தினமும் புது புது சொற்கள் வந்து கொண்டிருப்பதால் நாம் அகராதியை நாட வேண்டி உள்ளது .
இணையத்தில் பல அகராதிகள் இலவசமாக கிடைத்தாலும் குறிப்பாக சில அகராதிகள் மட்டும் சிறந்த தெளிவான அருஞ்சொற்பொருளை தருகிறது . இந்த அகராதி பெரிய அகராதியின் பொருள்களை ஒரு சேர தருகிறது . Princeton’s WordNet, Random House Webster’s College Dictionary, Kernerman English Learner’s Dictionary, and Webster Dictionary போன்ற அகராதிகளில் இருந்து நாம் தேடும் சொற்களுக்கு சிறந்த பொருளை தருகிறது இந்த இணையதளம் .

இருபத்திரண்டு மொழிகளை ஆதரிக்கும் ஆன்லைன் அகராதி மிகச்சிறந்த சேவையை இலவசமாக வழங்குகிறது . தினமும் நீங்கள் பல சொற்களை அறிந்து கொள்ள இந்த இணையதளம் தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை . ஒரு சொல்லுக்கு பொருள் தேடினால் அந்த சொல்லின் மொழியாக்கத்தையும் தருகிறது Definitions.Net
People Places,Nature,Technology Histry ,Miscellaneous என்ற தலைப்புகளில் முதல் பக்கத்திலே சில பிரபலமான வார்த்தைகளுக்கு விளக்கம் தருகிறது
இணையதளம் : http://www.definitions.net
நன்றி .wesmob