பேஸ்புக்கில் இணைக்கப்பட்டிருக்கும் புதிய அம்சங்கள்

பேஸ்புக் நிருவனம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமன சமூக வலைதளமாக இருந்து வருவதோடு பயனாளிகளும் அதிகரித்து வருகின்றது எனலாம். பேஸ்புக் இன்று பலரும் பல விஷயங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். பேஸ்புக் சமூகவலைதளத்தில் தினமும் பல மாற்றங்களும் பல புதிய அம்சங்களும் சேர்க்கப்படுகின்றன.
அந்த வகையில் பேஸ்புக்கில் சேர்க்கப்பட்டிருக்கும் புதிய அம்சங்களை அடுத்து பாருங்கள்..
                                     
ஆடியோ
இனி பேஸ்புக் மெசஞ்சர் செயளியில் ஆடியோக்களை கேட்க முடியும்

பணி 
வேலையில் இருப்பவர்கள் வர்க் அக்கவுன்ட் என்ற தனி பேஸ்புக் அக்கவுன்ட் ஒன்றை உருவாக்கி கொள்ளலாம்

எச்சரிக்கை 
18 வயது குறைவானவர்களின் கனக்குகளில் சேஃப் மோடு எச்சரிக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. வயது கறைந்தவர்களின் கனக்குகளில் ஆபாச மற்றும் அச்சுறுத்தும் புகைப்படங்கள் இடம் பெறாது

படிப்பு 
புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மார்க்க சூக்கர்பர்க் தன் பங்கிற்கு புதிய பக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளார் இதில் தற்போது வரை சுமார் 100,000 லைக்குகள் கிடைத்திருக்கின்றன.

புகைப்படங்கள் 
ஐஓஎஸ் அல்லது ஆன்டிராய்டு மூலம் யாரேனும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் போது தானாக அது மேமபடுத்தப்படும்.

நன்றி 
நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீடியோ செய்யப்பட்டு விரும்பியவர்களுக்கு இதனை அனுப்பலாம்

பப்ளிஷ் 
பேஸ்புக் மூலம் விளம்பரம் செய்பவர்களுக்காக புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நண்பர்கள்
 தெரியாத நபர்களுக்கு ப்ரென்டு ரிக்வஸ்ட் அனுப்பினால் பேஸ்புக் எச்சரிக்கை அனுப்பும், மீறி ரிக்வஸ்ட் அனுப்பிய பின் அது ரத்து செய்யப்பட்டால் 11 முதல் 14 நாட்கள் வரை யாருக்கும் ரிக்வஸ்ட் அனுப்ப முடியாது.

ரூம்ஸ்
ரூம்ஸ் செயளி மூலம் பலருடன் இணைப்பில் இருக்க முடியும்

சேவ் 
சில போஸ்ட்களை சேவ் செய்து பின்னர் பார்க்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் இணைக்கப்பட்டிருக்கும் புதிய அம்சங்கள் பேஸ்புக்கில் இணைக்கப்பட்டிருக்கும் புதிய அம்சங்கள் Reviewed by ANBUTHIL on 6:48 PM Rating: 5
Powered by Blogger.