ANDROID
ப்ளூடூத் ஹெட்செட் உடன் மொபைல் போனை இணைப்பது எப்படி?
பயனத்தின் போது மொபைல் போன் அழைப்புகளை மேற்கொள்வதை பாதுகாப்பாகவும், வசதியாகவும் செய்ய ப்ளூடூத் ஹெட்செட் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனங்களில் செல்லும் போது அழைப்புகளை மேற்கொள்வது சுலபமாவதோடு பாதுகாப்பாகவும் அமைகின்றது.
ப்ளூடூத் ஹெட்செட்களை உங்கள் மொபைல் போனுடன் இணைப்பது எப்படி என்பதை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். மொபைலை ப்ளூடூத் ஹெட்போனுடன் இணைக்க இதை பின்பற்றுங்கள்..
சார்ஜ்
முதலில் உங்களது மொபைல் மற்றும் ப்ளூடூத் ஆகியவற்றை சார்ஜ் செய்து கொள்ளுங்கள்.
ஆன்
அடுத்து ப்ளூடூத் ஹெட்செட்டில் pairing mode ஆன் செய்ய வேண்டும்.
மொபைல்
மொபைல் போனில் ப்ளூடூத் கருவிகளை கண்டறிய வேண்டும். கண்டறிந்த பின் இணைக்க வேண்டும்.
பேர்
இப்பொழுது மொபைலில் குறியீட்டு எண்னை டைப் செய்ய வேண்டும்.
தகவல்
மொபைல் மற்றும் ப்ளூடூத் இணைந்ததை உறுதி படுத்தும் தகவல் போனில் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
நிறைவு
தகவல் வந்ததும் இணைப்பு முடிந்து விடும், இதன் பயன்பாடு ஒவ்வொரு மென்பொருளுக்கும் வேறுபடும்.