டூயல் சிம் கொண்ட ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் ரூ.3,090க்கு

அக்வா சீரிஸ் போன்களின் வரிசையில், இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. இன்டெக்ஸ் அக்வா V2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மிக குறைந்த விலையில் ரூ.3,090க்கு விற்பனை செய்யப்படுகின்றது. டூயல் சிம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனை ஈபே தளத்தில் மட்டும் ரூ.3,130க்கு வாங்க முடியும்.

இதன் சிறப்பம்சங்களை பொருத்த வரை 3.5 இன்ச் டிஸ்ப்ளே, HVGA டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் ஆன்டிராய்டு 4.4.2 கிட்காட் மூலம் இயங்குவதோடு 1.0 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 256 எம்பி ராம், 104 எம்பி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. 
                                      Intex Aqua V2
கேமராவை பொருத்த வரை 2.0 எம்பி ப்ரைமரி கேமரா, ப்ளாஷ் மற்றும் VGA முன்பக்க கேமரா இருப்பதோடு, சீன் மோடு, கலர் எபெக்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தநை சிறப்பம்சங்களுக்கும் சக்தியூட்ட 1300 எம்ஏஎஹ் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
டூயல் சிம் கொண்ட ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் ரூ.3,090க்கு டூயல் சிம் கொண்ட ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் ரூ.3,090க்கு Reviewed by ANBUTHIL on 11:30 AM Rating: 5
Powered by Blogger.